உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியகத் தலைவர், ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர், சுற்றுலா பணியக பணிப்பாளர், சுற்றுலாத்துறை அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம் ஆகிய உயர் அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பற்றிய தற்போதைய நிலையை ஆளுநர் ஆராய்ந்து, நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டிட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அந்தச் சந்திப்பில் ஆளுநர், சுற்றுலாத்துறையை பகுதிகளின் தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலாத்துறை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மரநடுகையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
விரைவாகவும் செயல்திறனுடனும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் பணித்தார். உலக சுற்றுலா தினத்தை இப்பிரதேசங்களில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளையும் அவர் ஆராய்ந்தது குறிப்பிடத்தக்கது.