சுமந்திரனும் சாணக்கியனும் வட, கிழக்கு தமிழ் மக்களின் செல்வாக்கைஇழந்துவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் இதனைதெரிவித்துள்ள அவர், தங்களது கோரிக்கைகளின் நிமித்தமே வடக்கு, கிழக்குமக்கள் சஜித்துக்கு வாக்களித்தார்கள் என சுமந்திரனும் சாணக்கியனும்குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதற்கு முந்தைய தேர்தலிலும் சஜித் பிரேமதாஸ, தமிழ் மக்களின் கணிசமானவாக்குகளைப் பெற்றவர். பல வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பதனால் அவர்பலருடன் தொடர்பு வைத்திருக்கின்றார்.
அதைவிட யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலதேர்தல் தொகுதிகளில் முதனிலைபெற்றவர் அரியநேத்திரன். அவர் சிலதொகுதிகளில் இரண்டாவதுநிலைபெற்றபோதும் மிகக் குறைவான வாக்குகளினாலேயே இரண்டாவதுஇடத்துக்கு வந்தார். எனவே பெருவாரியான மக்கள் மனமுவந்துஅரியநேத்திரனுக்கு வாக்களித்துள்ளார்கள். அத்துடன் முஸ்லிம்கள் பலர்சஜித்துக்கு வாக்களித்திருந்தார்கள். அவர்கள் சுமந்திரன், சாணக்கியன்ஆகியோரின் வேண்டுகோளை மதித்து அவ்வாறு வாக்களிக்கவில்லை.
முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் ரிஷாத் பதியுதீனின் செல்வாக்குஇருந்து வருகிறது. மஸ்தானின் செல்வாக்கும் இருந்து வருகின்றது. எனவேசஜித்துக்கு முஸ்லிம்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கலாம். மேலும், முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று அவர்களும்(சிங்களவர்கள்) அங்கு வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள். முல்லைத்தீவில்மக்கள் மற்றும் படையினரின் விகிதவீதம் 2:1 ஆகும். எனவே, சஜித்துக்குகிடைத்த வாக்குகள் ஏற்கனவே அவருக்கு இருந்த வாக்குகளும்.
நூற்றுக்கும் அதிகமான பௌத்த விஹாரைகளை முல்லைத்தீவிலும் கிழக்குமாகாணத்திலும் கட்டவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் சஜித். அவ்வாறான ஒருவருக்கு சுமந்திரன் கூறியதால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா?
கிழக்கு மாகாண தமிழ் மகனான அரியநேத்திரனுக்கு பெருவாரியாக வாக்களித்தவட மாகாணத் தமிழ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.