தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷநாணயக்கார நாளை (ஜனவரி21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிவாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (ஜனவரி20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர்முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்தமுன்பிணை மனு இன்று அழைக்கப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரானஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்தார்.
தனது கட்சிக்காரர் நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுவாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில்இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும்ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22 ஆம்திகதி அழைக்கப்படவுள்ளது