தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு வெளி நபர்களை சந்திக்க சிறைச்சாலை திணைக்களம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளது.
அன்றைய தினம், இந்து மத கைதிகளின் உறவினர்கள், ஒரே கைதிக்காக போதுமான அளவு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த வாய்ப்பு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் வழங்கப்பட்டு, சுகாதார வழிகாட்டுதல்களையும் சிறைச்சாலை விதிமுறைகளையும் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.