நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராஜப்புஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் நடாத்தப்பட்ட BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று ( ஜூலை 14) மாலை நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி ஆர். அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுகளின் இறுதி போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன் நெடுந்தீவு மண்ணின் விளையாட்டு வீரர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படரடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டித் தொடர்களில் வெற்றியீட்டிய அணிகள் , திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிக் கிண்ணங்களும் , பணப் பரிசிலும் வழங்கப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளம் ஊடாக நேரலையில் ஒளிபரப்பாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.