வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று(செப்ரெம்பர் 26) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
நெடுந்தீவின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கலை திறமைகளை வெளிப்படுத்தி இருந்ததுடன் , கலைவளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் தொடர்பாகவும் அதன் தேவைப்பாடுகள் மற்றும் முன்னேற்றத்திற்கான இடர்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு அம்சமாக நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.