நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் நிறுவுனர்தினம் இன்றையதினம் (ஜனவரி17) சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 79 வது வருடத்தில் தடம் பதிக்கும் தினத்தினைமுன்னிட்டு வருடாந்த பொங்கல் நிகழ்வு வித்தியாலய இந்து ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.
அனைத்துப் பாடசாலைகளிற்கும் 100 மரக்கன்றுகள் புலம்பெயர் உறவின் நிதி அனுசரணையோடு ஒராயம் அமைப்பினூடாக வழங்கும் நிகழ்வும்வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை க.பொ.த சா.தர பரீட்சையில் உயர் பெறுபேற்றைப்பெற்றமாணவர்களுக்கு அமரர் நாகேந்திரர் ஞாபகார்த்த பணப்பரிசில் வழங்கும்நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.