நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் சமுர்த்தி அபிமானி மாபெரும் விற்பனை சந்தை இன்று (ஏப்ரல் 08) காலை 10.00 மணியளவில் தலைமை சமுர்த்தி முகாமையாளர் திரு. இ. ராஜ்பவான் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மதிப்புக்குரிய தி. விஸ்வரூபன் அவர்களும் அவரோடு இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களும் உதவி பிரதேச செயலாளர் திரு. தே. கென்சன் அவர்களும் வைபவரீதியாக நாடாவை வெட்டி சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.
இச் சந்தையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன. அதில் கடற்சிப்பி , முருகைகல் என்பவற்றில் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், பனை ஓலைகளில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் , தையல் பயிற்சி பெற்றவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடை ஆலங்கார பொருட்கள் , விவசாய உற்பத்திகள் , கருவாடு உற்பத்திகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தமிழ், சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச் சந்தை நாளைய தினமும் நடைபெறும் எனவே அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.