இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்னவின் கூற்றுப்படி, 40 வயதைக் கடந்த நால்வரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரியவந்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளின் அடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நீரிழிவு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த மாவட்டங்களில் சுமார் 40 வயதுக்குட்பட்டவர்களில் 33% பேருக்கு கடுமையான நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள், கை, கால் நரம்புத் தளர்ச்சி, கண்பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன், சிறுநீரக செயலிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
நீரிழிவின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் மேற்கொள்ளவும் மருத்துவர் மந்திக்க விஜேரட்ன வலியுறுத்தியுள்ளார்.