சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சிவநெறிப் பிரகாசர் சமய ஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர், தெல்லிப்பழை சிவகாமி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் உருத்திரபசுபதி நாயனார் என்னும் தலைப்பில் நாளை (ஒக்ரோபர் 13) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.
சேக்கிழார் பெருமானின் குருபூஜையைத் தொடர்ந்து ஸ்ரீருத்திரம் ஓதியதால் உருத்திரபசுபதி என்னும் திருப்பெயர் பெற்ற நாயனார் என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் செ.த.குமரன் சொற்பொழிவாற்றவிருப்பதுடன்,நிறைவாக சொற்பொழிவிலிருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டு, சரியான பதில்களைக் கூறும் மாணவர்களுக்குப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.