குமுதினி படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை குமுதினியில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 8 .15 மணியளவில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி திருப்பலியும், சம நேரத்தில் மாவிலித் துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்பு பூஜையும் இடம் பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணி முதல் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவுப் பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற உள்ளதுடன் நினைவுத்தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரனின் “குருதியின் குமுறல்கள் “ என்ற கவிதை நூலும் அன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் இறுதியில் நினைவாலய வளாகத்தில் நினைவு மரநடுகையும் இடம்பெறவுள்ளது. எனவே இந்நிகழ்வுகளில் நெடுந்திவு வாழ் மக்கள் அனைவரும் உரிய நேரத்தில் கலந்து ஆத்ம சாந்தி வேண்டிய திருப்பலியிலும், பூசைகளிலும் கலந்து அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு நினைவேந்தல் குழுமத்தினர் வேண்டிநிற்கின்றனர்.