நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் ஒரு குடும்பத்தின் மாதாந்திரச் செலவு 6,037 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவுப் பொருட்களுக்கு செலவாகும் மாதாந்திர தொகை 2,885 ரூபாயால் குறைந்துள்ளதையும், உணவாத பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைச் சரிவால் பொது மக்களுக்கு 3,145 ரூபாய் அளவில் நன்மை கிடைத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.