கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் வசித்து வரும் பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஆகஷ்ட் 21) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கியுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்
கியுமெடிக்கா நிறுவனம் எமது நெடுந்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பா தற்போத கல்விச் செயற்றிட்டமும், அவசர கடல் அம்புலன்ஸ் படகுச் சேவையினையும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.