களனி திஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்குத் தேவையான நெப்தா எரிபொருள் இல்லாதமையே இந்தத்த தீர்மானத்துக்குக் காரணம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதால், தேசிய மின்னுற்பத்தியில் 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.