நண்பா்கள் வட்டத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவினால் கல்வி அபிவிருத்தி நிலையம் நாளைய தினம் (பெப்ரவாி 20) மாலை 03.30 மணிக்கு நண்பா்கள் வட்டத்தின் தலமைக்காாியாலய வளாகத்தில் ஆரம்பிக்கபபவுள்ளது.
இக்கல்வி அபிவிருத்தி நிலையத்தில் ஆரம்ப பிாிவு மாணவா்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இடம் பெற்று வருவதுடன், மறைந்த சீக்கிாியாம் பள்ளம் அ.த.க வித்தியாலயத்தின் முதல் அதிபரும் எமது தலைமைக்காாியலயம் அமைந்துள்ள வீட்டின் உாிமையாளருமான மதிப்பிற்குாிய அமரா் ம.செபமாலை அவா்கள் ஞாபகமாக நினைவு நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் மாணவா்கள் கணணி அறிவினை வளா்க்கும் நோக்குடன் கணணிப்பயிற்சி நிலையமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் இவ்வருடம் தரம் 01இற்கு புதிதாக இணைந்துள்ள மாணவா்களை கௌரப்படுத்திக் கொள்ளவதுடன், அவா்ளுக்கு சேமிப்பு பழக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 1000.00 பணம் வைப்பிடப்பட்டு புதிய கணக்குகள் ஆரம்பித்து வளங்கப்படவுள்ளது.
இச் செயற்பாடுகள் யாவும் மறைந்த எமது நண்பா்கள் வட்டத்தின் உறுப்பினா் அமரா் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவா்களது ஞாபகமாக அவரது பிறந்த தினத்தில் அவரை ஞாபகப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
இக் கல்வி அபிவிருத்தி நிலையத்தில் மாணவா்கள் பயன் பெறும் வகையில மேலதிக வகுப்புக்கள், கணணி வகுப்புக்கள், ஆங்கில சிங்கள வகுப்புக்கள், இசை வகுப்புக்கள், நூலக சேவை, இணைய வசதிகள், தொழிநுட்ப ாீதியான கல்வி முறை, மற்றும் உள்ளக விளையாட்டு நிகழ்வுகள் என்பன ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன