சட்டவிரோதமாகப் படகில் கனடா செல்ல முயற்சித்து, படகு பழுதடைந்த நிலையில் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 151 பேர் இன்று (டிசெம்பர் 28) இலங்கை திரும்பவுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி படகு பழுதடைந்த நிலையில் கடலில் தத்தளித்த 303 இலங்கையர்கள் வியட்நாம் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
படகில் மீட்கப்பட்டவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தபோதும், அவர்களில் ஒரு தொகுதியினர் இலங்கை திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தபோதும், அவர்களில் ஒரு தொகுதியினர் இலங்கை திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்குத் திரும்பியனுப்பும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருவர் தற்கொலை முயற்சி எடுத்திருந்த நிலையில் அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், இலங்கை திரும்பச் சம்மதித்த 151 பேர் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வியட்நாம் நாட்டு நேரப்படி நேற்றுப் பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இலங்கையை வந்தடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.