வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (மார்ச் 06) பிற்பகல் 2.30 மணிக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கான கடற்படை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டு, தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்துகொண்டு செல்லவுள்ள பக்தர்கள் சுமார் 9000 பேர் வரை இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் பயணிகள் குறிகாட்டுவான் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் எனவும், பிற பகுதிகளில் இருந்து செல்லும் பயணிகள் தங்களது பிரதேசங்களிலுள்ள கடற்படை முகாம்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
படகு சேவை கட்டணங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டதாவது:
- குறிகாட்டுவானிலிருந்து கச்சதீவு: ஒருவழிக்கட்டணம் ரூ.1300.00
- நெடுந்தீவிலிருந்து கச்சதீவு: ஒருவழிக்கட்டணம் ரூ.1000.00
இதில், 25 சாரணர்கள் திருவிழாவில் ஈடுபடுத்தப்படும் எனவும், கடற் போக்குவரத்துக்கான படகுகள், அவற்றின் சேவை நேரங்கள் போன்ற விடயங்கள் கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பக்தர்களுக்கான 14ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15ஆம் திகதி காலை உணவுக்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. மேலும்,
- தங்குமிட வசதிகள்
- உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதிகள்
- மலசலகூடங்கள், ஒளி, ஒலி வசதிகள்
- கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஏற்பாடுகள்
- ஆலய சூழல் தூய்மை மற்றும் கழிவு முகாமைத்துவம்
- தொலைத்தொடர்பு வசதிகள் (Dialog, Mobitel)
- ஊடக அனுமதி
ஆகிய விடயங்கள் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
இந்த கலந்துரையாடலில்,
- யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம்
- மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
- வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி
- மாவட்ட பிரதம கணக்காளர்
- அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்
- உதவி மாவட்ட செயலாளர்
- நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள்
- கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதிகள், யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.