கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பக்தர்களின் கடற்பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, கடற்படையினரிடம் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவிழாவுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்யும் பக்தர்களின் பதிவுகள் குறிகாட்டுவான் துறைமுகத்தில், மார்ச் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்படும். இதற்காக, ஏனைய பிரதேசங்களிலிருந்து பங்கேற்கும் பக்தர்கள், கடற்பாதுகாப்பு காரணமாக, தங்களது பிரதேசங்களிலுள்ள கடற்படை முகாம்களில் அதே நாளில் (மார்ச் 14) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்கான கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 9000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து, கடற்படையின் ஒத்துழைப்பு இந்நிகழ்வில் அத்தியாவசியமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.