கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று மாலை (மார்ச் 3) நான்கு மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.
நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
இம்முறை வருடாந்த கச்ச தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை ,இந்தியத் துணைதூதவராலயம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறபாக ஆரம்பமாகியுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
60 நாட்டுப் படகுகளிலும் 16 இழுவை மடிப் படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 அதிகாரிகள் ,வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் கச்ச தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.