ராகம பகுதியைச் சேர்ந்த தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் குறித்த தாய் ஆறு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார்.
ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.
ஐந்து குழந்தைகள் காசல் வீதி வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரிய மற்றும் விலைமதிப்பற்ற பிறப்புகள் வாழ்க்கையின் அற்புதங்களுக்கும், சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.