ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது, ‘B.1.42’ என்ற பிரிவை சேர்ந்த வல்லமை மிக்க வைரஸ் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகேவினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ்கள், B.1, B.2, B 1.1, B.4 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவை எனவும் அவர் கூறுகின்றார்.