உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு உட்பட்டு நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா இன்று (பெப்ரவரி 10) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரம், உள்ளாட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.