உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் இருந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எவையும் இல்லாததால் வேட்புமனுக்களை இரத்துச் செய்து மீண்டும் வேட்புமனுக்களைக் கோருவதே சிறந்தது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற வேட்பு மனுக்களை இரத்துச் செய்யம் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.