உலக சாதனை நிகழ்வு நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 16) பொகவந்தலாவை ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மனித உடலிலுள்ள 423 உள் உறுப்புகளின் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி பொகவந்தலாவையைச் சேர்ந்த கனிஷிகா என்ற 8 வயது பாடசாலை மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றிதழும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் புதல்வியான பொகவந்தலாவை ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தில் இதற்கமைய, உலகில் அதிக நினைவாற்றல் கொண்ட சிறுமிகளின் பட்டியலில் இலங்கை மாணவி கனிஷிகாவும் இணைந்துள்ளார்.