இலங்கையில் மதுசாரப் பாவனையினால் நாளொன்றிற்கு 40 பேர் அகாலமரணமடைவதுடன்,வருடமொன்றுக்கு 15,000 பேர் மரணிப்பதா க.மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் றஹீம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளருக்கான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப் பிட்டார்.அவர் மேலும் தெரிவித்த போது, இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மதுசாரம் அருந்தும் நிலையில்,மதுசாரம் அருந்தும் நபர்களுக்கிடையே மதுசாரப் பாவனை 18.9 வீதமாக உள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு 49.7 கோடி ரூபா பெறுமதியான பியர் பாவனை காணப்படுகின்றது.அதாவது, இலங்கையில் மதுசாரம் 9.3 கோடி (93 மில்லியன்) ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கையின் வருமானத்தைப் பொறுத்தவரை மதுசார இறக்குமதியினால் அதிக வருமானம் கிடைப்பதாக பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது புகைத்தல் மற்றும் மதுசாரப் பாவனையை இளம் சமுதாயத்தின் மத்தியில் அதிகரிப்பதற்காக,கம்பெனிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வரு கின்றன.
மேலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 82 வீதமானவர்கள் மதுசாரப் பாவனையில் ஈடுபடுவதில்லையென ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் புகைத்தல்,மதுசாரப் பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான கொள்கைகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இவற்றைத் தடுப்பதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமாகப் பார்க்கப்படும் நிலையில்,இந்திய ஊடகங்களில் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனை தொடர்பான விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை.
ஆனால்,இலங்கையில் இந்தியாவைப் போன்று ஊடக கலாச்சாரத்தில் முன்னேற வேண்டிய தேவையுள்ளது.ஏனெனில் பெரும்பாலான ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களாகவே உள்ளனர்.
ஆகவே,கடந்த காலங்களை விடவும் இலங்கையில் புகைத்தல் பாவனை மற்றும் மதுசாரப் பாவனை குறைந்து வரும் நிலையில்,அவற்றைத் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஊடகவியலாளர்களின் பங்கு மிகவும் அவசியமெனவும் அவர் மேலும் தெரிவித் தார்.