இலங்கையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் (நேற்றுமுன்தினம் தொடக்கம் நேற்று வரை) நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 38 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதல்களே இந்த கொலைகளுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், யுத்தம் முடிந்த கையுடன் யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் ஆயுதங்கள் வன்முறைக் கும்பல்களின் கைகளுக்குச் சென்றன என்று தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கருத்தை இறுதிப்போரை வழிநடத்திய தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
‘இறுதிப்போரின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன’ என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.