கச்சதீவு புனித அந்தோனியார் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்ற இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதிலூர்து ஆனந்தம் ஆண்டகை இன்று (மார்ச்14) காலை கச்சதீவை வந்தடைந்துள்ளார்.
இவருடன் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் குருக்களும் குறிகாட்டுவான் துறைமுகமூடாக நெடுந்தாரகை படகில் கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் , இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள் என பலரும் இப்படகு மூலம் கச்சதீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.