நெடுந்தீவில் இடம்பெற்று வருகின்ற Bishop cup 2024 போட்டித் தொடரின் கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்டம்ஆகியவற்றின் இறுதியாட்டமானது நாளை (ஜூலை14) இடம்பெறவுள்ளது.
கிரிக்கெற் சுற்றுத்தொடர்களில் பலமான அணிகளுடன் மோதி சென் பற்ரிக்ஸ்அணியும் , சென் மைக்கல் அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வாகி மோதவுள்ளன.
இதேவேளை உதைபந்தாட்ட இறுதியாட்டத்திற்காக சென் கென்றிஸ் அணி தகுதிபெற்றுள்ள நிலையில் இறுதி ஆட்டத்திற்கான மற்றைய அணியைதேர்வுசெய்யும் ஆட்டமானது நாளை காலை இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் (ஜூலை 13) மின்னொளியில் புனித யுவானியார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் திருத்தந்தைஅருளப்பர் அணி வெற்றிக்கேடயத்தை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.