நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின், இலங்கை சுங்கப் பிரிவினரால் பண்டராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது அவர் வைத்திருந்த தங்கத்தின் மொத்த பெறுமதி 74 மில்லியன் ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் பயணப் பொதியிலிருந்த 91 புத்தம் புதிய அதிதிறன் அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 78 மில்லியன் ரூபாயாகும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 3.5 கிலோ கிராம் தங்கத்துடன் இலங்கை சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஆவார். ரஹீம் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் கூட்டணி வேட்பாளராக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.