அருள்நாயகம் அவர்களின் இறுதிக்கியைகள் இடம் பெற்றது.
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் சிறந்த படகோட்டியாக விளங்கிய அங்கிள் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருள்நாயகம் அவர்கள் இன்றைய தினம் (மே 07) இயற்கை எய்தினார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் கட்டுப்பாடுகள், மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை கவனத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் அவரது இறுதி நிகழ்வுகள் குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன், யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்ததில் துணிச்சல் மிக்க திறமையான அனுபவம் கொண்ட சிறந்த படகோட்டியினை இன்றைய தினம் எம் தீவகம் இழந்துள்ளது. நெடுந்தீவு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த ஆயத்தமான போதும் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் கொடுக்க வில்லை
அங்கிள் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவர் அனேக நெடுந்தீவு மக்களின் மனங்களிலும் நெடுந்தீவுடன் உறவு கொண்டுள்ள பலர் மத்தியிலும் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
திருவுடல் பெரிய கோவிலில் பங்குத் தந்தையின் இறுதி ஆசிர்வாதத்துடன், நல்லடக்கம் செய்யப்பட்டது. நெடுந்தீவு மைந்தன் வட மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர்; திரு.ஜே.எக்ஸ்.செல்வநாயம் அவர்கள் கலந்து கொண்டு நெடுந்தீவு மக்கள் சார்பாக இறுதி ஆஞ்சலி உரையினை ஆற்றினார்.
அங்கிளின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய வேண்டுவோம்.