தனியார் துறையில் சேவையில் ஈடுபடும் வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள்வாக்களிப்பு தினத்தன்று கட்டாயம் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம்நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில்ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுபொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் பெறுபெறுகள் வெளியானவுடன் பொது இடங்களில் ஒன்று கூடி, பட்டாசுகொளுத்துவது சட்டத்தின் பிரகாரம் குற்றச்செயலாகும் என்றும் தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள்வாக்களிப்பு தினத்தன்று கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமையில் ஈடுபடாமல்இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஆணைக்குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியைகொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள்ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது