அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நெடுந்தீவினை சேர்ந்த அமரர் இராமலிங்கம் இராமசிப்பிள்ளை அவர்களது ஞாபாகமாக நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 06கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தரம் 01 முதல் தரம் 05 வரை கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் வேப்பம் மரக்கன்றும் தென்னை மரமும் வழங்கி வைக்கப்பட்டது,
அமரர் இரமாசிப்பிள்ளை அவர்களது பேரன் திரு.கண்ணன் அவர்களினால் பிரதேச செயலகத்தின் ஊடாக அனைத்த மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவின் காலமாற்றங்கள் மற்றம் எதிர்கால சந்ததியினது தேவையறிந்து தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் மிகவும் வரவேற்கத் தக்கவிடயம் வழங்கப்பட்ட வேப்பங்கன்றுகள் அனைத்தும் நெடுந்தீவிலேய பதிவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்ததன் பின்னரே மாணவர்களுக்க வழங்கப்பட்டது
பசுமைப்புரட்சியினை மேற்கொள்ளும் நோக்குடன் தனியான காணி பெறப்பட்டு பதிவைக்கபட்டு சரியான முறையில் பராமரிக்கப்பட்டு சிறந்த முயற்சியினுடாக செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தினை மக்கள் சிறப்பாக ஏற்றுக்கொண்டதுடன் பிள்ளைகளும் சந்தோசமாக பெற்று சென்று வீடுகளில் பாதுகாப்பாக வைக்கப்படுவதனை காணமுடிந்து.