சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் நெடுந்தீவில் 4000 பனம் விதைகள் நடப்பட்டன
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர் அமரர் சி.வி.எட்வேட் நவரத்தின சிங்கம் அவர்களது 112வது பிறந்த தினத்தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் 4000 பயன்தரு பனை விதைகள் இன்றைய தினம் (நவம்பர் 12) நெடுந்தீவு சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினாரல் பிரதேச செயலகம் ஊடகாக செயற்படுத்தப்பட்டது.
திருமதி அருமைத்துரை தங்கமணி குடும்பம் மற்றும் திருமதி தையல் முத்து ஆகியோரின் அனுசரணையில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சூழல் மாற்றங்களையும் எதிர்கால சந்ததியினரையும் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் இச் செயற்றிட்டம் வரவேற்கத்தக்க விடயமாகும்.