நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை(ஒக்ரோபர் 23) சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.