இலங்கையில் தேசியவாதத்தின் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ரஜினி திராணகம ஞாபகார்த்த உரையாடல் யாழ்ப்பாணம் சென்.ஜோண்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சென்.ஜோன்தபப்டிஸ்ட் தேவாலயத்தின் பரிஷ்மண்டபத்தில் நாளை(ஒக்ரோபர் 21) சனிக்கிழமை பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளது.
ரஜினி திராணகம ஞாபகார்த்தக் குழு, மற்றும் சகவாழ்விற்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில், சட்டத்தரணியும்,தொழிற்சங்கவாதியுமான செல்வி.சுவஸ்திகா அருள்லிங்கம்,இலங்கைத் திறந்த பல்க லைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ், களனி பல்கலைக்கழகப் பேராசியர்.பிரபா மனுரட்ன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் விரிவுரையாளர் கலாநிதி.மகேந்திரன் திருவரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
குறித்த உரையாடல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.