இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் வீட்டில் யாழ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின்இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கியஅரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்றுகாட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர்சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டமேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின்தமிழரசு துரோகிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்குறித்த பதாகை தொடர்பில் பொலிஸார் மாவையின்வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணிஎன்ன என்பவை தொடர்பில் மாவையின் குடும்பத்தாரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டிற்கமையவே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.