பொது மக்களின் காணிகளைஅபகரிக்க முயலும் சட்டத்தரணி பன்னம்குள மக்கள் போர்கொடி-
திருகோணமலை பன்குளம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்களின் காணிகளை அபகரிக்க முயன்ற சட்டத்தரணி ஒருவரின் செயலை கண்டித்து பன்குள்ம் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள காணிகள் பலதின் உரிமையாளர்கள் கடந்தகால யுத்தத்தால் இடம்பெயர்ந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.
இவற்றை சாதகமாக பயன்படுத்தி குறித்த பிரதேசத்தில் உள்ள காணிகள் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி தனியார்களால் அபகரிக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருக்கின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் முறiயிட்டு வருக்கின்றனர்.
ஆயினும் சில விசமிகள் தமது பணபலம் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு காணியினை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடபட்டு வருக்கின்றனர்.
கடந்த ஜுன் 30 திகதி பன்குளம் பிள்ளையார் ஆலயத்தக்கு அருகில் இருக்கும் காணி ஒன்று சட்டத்தரணி ஒருவரால் அடாத்தாக அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவை மக்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
முக்களின் எதிர்ப்பை அடுத்து மொரவௌ பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு விஜயம் செய்து காணி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் வழக்கில் முடிவு கிடைக்கும் வரை எவரும் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த காணி தொடர்பிலான அத்தாட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் சட்டத்தரணி இதன்போது பொலிசாரிடம் குறிப்பிட்டார்.
ஆனாலும் கிராம மக்கள் அக்காணி உரிமையாளரை தமக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் தம்மோடு தற்போதும் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு சொந்தமானதே குறித்த காணி என்றும் வாதிட்டனர்.
ஆனாலும் குறித்த காணிக்குள் மிக விரைவில் தான் கடை அமைக்கவுள்ளதாகவும் தடுக்க முடிந்தால் தடுத்துப் பார்க்குமாறு சட்டத்தரணிக்கு மக்களுக்கு சவால் விட்டு அப்பகுதியிலிருந்து நகர்ந்தார்.
குறித்த காணியின் எல்லை கல்லுகள் மற்றும் எல்லையினை அடைழயாளப்படத்தும் வகையில் நாட்டப்பட்ட பனைமரங்களும் சட்டத்தரணியினால் வெட்டி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.