கொரோனா தொற்று நிலைமையின் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் கிருமி நீக்கம் செய்தல், நேர அட்டவணை தயாரித்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பல கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 06) ஆரம்பமாகவுள்ள முதலாம் கட்டத்தின் கீழ் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய ஆண்டு மாணவர்களுக்காக பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த வாரத்தினுள் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பராமரித்துச் செல்வதற்கு தேவையான சுற்றுச்சூழல் தயார்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.