பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன வெளியிட்ட அறிவிப்பில், 77வது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்கள் விழாவை நேரில் கண்டுகளிக்க அதிக வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய ஆண்டுகளில், சுதந்திர தின விழா யாருக்காக நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்த நிலையில், இம்முறை அதிக மக்கள் பங்கேற்கும் வகையில், மக்களுடன் இணைந்து விழாவை கொண்டாட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.