நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற் சங்கங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டதால் நோயாளர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற் சங்கங்களால் மருந்து தட்டுப்பாட்டு, வாிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 8 கோாிக்கைகளை முன்வைத்துப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்குச் சென்ற நோயாளர்கள் மருந்து வழங்குபவர்கள் இல்லாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் முக்கியமான சில பிரிவுகள் இயங்கின.