யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு விழா மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரி கழக தலைவருமான அ.நிர்மலனின் தலைமையில் கடந்த 24 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிக்கழக போசகருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சுப்பிரமணியம் முரளீதரன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் முதல் நிகழ்வுகளாக தேசியக்கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் , மாவட்ட செயலக கொடி ஏற்றல், பிரதேச செயலக கொடி ஏற்றல், வரவேற்புநடனம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வில் கலாசார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன்
இறுதி நாள் போட்டி நிகழ்வுகளாக வலைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன.
அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகளுக்கான விருதுகளில் முதலாம் இடத்தினை(over all champion )தெல்லிப்பளைப் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தினை ( Runner up champion ) யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மெய்வல்லுநர் போட்டிகளுக்கான கனவான் விருதினை நல்லூர் பிரதேச செயலகமும், ஏனைய போட்டிகளுக்கான கனவான் விருதினை கரவெட்டி பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.
மேலும் இந்த நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளையும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்ததுடன், எதிர்வரும் 2023 அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகள் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.