சிறந்த படகோட்டி அருள்நாயம் அவர்கள் இயற்கை எய்தினார்
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் நம்பிக்கையுடன் மக்கள் பயணம் செய்யும் சிறந்த படகோட்டி என நெடுந்தீவு மக்களால் புகழப்பட்ட திரு.ம.அருள்நாயகம் அவர்கள் இன்றைய தினம் (மே 07) இயற்கை எய்தினார்.
அங்கிள் எனும் பெயர் கொண்டு அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார்.
நெடுந்தீவு கடல்போக்குவரத்தில் பல்வேறு அனுபவங்கள் கொண்ட இவர் ஒரு சிறந்த படகோட்டியாக மக்களால் போற்றப்பட்டதுடன் கௌரவமும் வழங்கப்பட்டிருந்தது.
இவர்; பல வருடங்கள் நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பயனிகள் போக்குவரத்து படகில் படகோட்டியாக பணியாற்றி வந்தார் கொந்தளிக்கும் கடல் அலைகள் கடற் சீற்றங்களிலும் மக்களை பாதுகாப்பாக கரையேற்றிய உத்தமர். படகோட்டியாக அங்கிள் இருக்கிறார் என்பதே பிரயாணம் செய்யும் மக்கள் பலருக்கு தைரியத்தினைக் கொடுக்கம்.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்றை தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியாசாலையில் இயற்கை எய்தினார்