எமது மரநடுகை முயற்சிக்கு 5 இலீற்றர், 7 இலீற்றர் கொள்ளளவுடைய வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்களைத் தந்து நீங்களும் உதவலாம்
ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளைப் பொது அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நான் சார்ந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமோ, இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையமோ மரக்கன்றுகளை ஒருபோதும் விற்பனை செய்வதில்லை. தாவர உற்பத்தியாளர்களிடம் மரக்கன்றுகளைக் கொள்வனவு செய்து, கவனமாகப் பராமரிப்போம் என்று உத்தரவாதம் தருபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
தாவர உற்பத்தியாளர்கள் நாட்டம் காட்டாத மரங்களை நாங்களே விதைபோட்டு வளர்த்து விநியோகிக்கின்றோம். இந்த முயற்சிக்கு வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துகின்றோம். பிளாஸ்ரிக் கழிவுகளைக் குறைப்பதில் பிளாஸ்ரிக் பொருட்களின் மீள் பாவனையும் மறுசுழற்சியும் பங்களிப்புச் செய்கின்றன என்ற வகையில் பாவித்த பின்னர் வீசப்படும் பிளாஸ்ரிக் தண்ணீர்ப் போத்தல்களைச் சேகரித்துப் பயன்படுத்துகின்றோம்.
யாழ் நகரிலுள்ள திருமண மண்டபங்களில் இருந்து 1.5 இலீற்றர் தண்ணீர்ப் போத்தல்களைச் சேகரிக்கின்றோம். எவரிடமாவது 5 இலீற்றர், 7 இலீற்றர் கொள்ளளவுடைய வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்கள் பயன்பாடின்றிக் காணப்படுமாயின் எங்களிடம் கையளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் இல. 109, அரசடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இவற்றைக் கையளிப்பின் மிகுந்த நன்றியுடையவர்களாக இருப்போம்.
தொடர்புகளுக்கு : 0777969644