கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலன்கருதி சுகாதார சேவை பணிமனையின் கீழ் சிறப்பான மருத்துவ சேவை முன்னெடுப்கப்பட்டதனைக் காணக்கூடியதாக இருந்தது.
கச்சதீவில் கடும் வெப்பம் காரணமாக பலர் உடல் ரீதியான அசௌகரியங்களை எதிர்கொண்டபோது கைகொடுக்கும் சிகிச்சை நிலையமாக செயற்பட்டிருந்தது.
மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் என பலர் துரித மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.