கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளையதினம் (மார்ச்15) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி காலை 7.00 மணிக்கி திருவிழா திருப்பலி இடம்பெறுவதுடன் , திருச்சொருப பவனியும் ஆசிர்வாதமும் இடம்பெற்று புனித அந்தோனியார் திருநாள் நிறைவடையவுள்ளதாக ஆலய பரிபாலகர் அருட்திரு ப .பத்திநாதன் அடிகளார் அறிவித்துள்ளார் .
இன்றையதினம் (மார்ச் 14) மாலை 4.15 மணிக்கு கொடியேற்றத்தினை தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலைவைப்பாதை , என்பவற்றுடன் நற்கருணை திருப்பலி இடம்பெற்றமை குறைப்பிடத்தக்கது.