கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளையதினம் (மார்ச்14) ஆரம்பமாவுள்ள நிலையில் நெடுந்தீவு பிரதேசசெயலகம், பிரதேசபை, இலங்கை செஞ்சிலுவை சங்க கிளை, பல. நோ.கூ.சங்கம் மற்றும் சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் அலுவலர்கள் மற்றும் நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையினரும் நேற்றையதினமும் (மார்ச்12) இன்றும் (மார்ச் 13) கச்சதீவுக்கு பகுதி பகுதியாக வந்து நிர்வாகம் , சுகாதாரம் , குடிநீர் மற்றும் இதர ஏனைய சேவைகளை வழங்கும் வகையில் முன்னாயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் சகல துறைகளிலும் அவர்களுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதுடன் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.