இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம்!

Anarkali  - Senior Editor
0 Min Read

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று(ஒக்ரோபர் 21) காலை வைத்தியசாலை வளாகத்தில் நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வில் தீபாஞ்சலி, மலரஞ்சலி மற்றும் நினைவுரைகள் என்பன மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர்கள் , வைத்தியர்கள், தாதியர்கள் , பணியாளர்கள் மற்றும் உயிரிழந்தோரின் உறவுகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article
Exit mobile version