வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையின் கண்சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மலரவன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி. சுப்பிரமணியம் ஆகியோர், நேற்று (நவம்பர் 25) ஆளுநரை சந்தித்து இந்த விவகாரத்தில் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில், வடக்கு மாகாண சபை காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு ஒருங்கிணைப்புக் குழு (focal point) அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆளுநர் இந்த கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க உறுதியளித்தார்.