நெடுந்தீவில் கொரோனா பயணத்தடையால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது. நாட்டு நிலமைகளைக்கருத்திற்கொண்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிய முடிகின்றது.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிவஞானம் சிறீரங்கன் அவர்களின் நிதி உதவியில் நெடுந்தீவில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வழிப்படுத்தலில், சிறீதரன் எம்.பியின் நெடுந்தீவு இணைப்பாளரும் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளை உறுப்பினருமான மதுவண்ணன் (சுதன்) அவர்களால் இன்றைய தினம் (ஜீன் 21) வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்
பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கொரோனாவால் பாதகிக்ப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் காலையில் குறிகட்டுவான் துறைமுகம் சென்று பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.