சுற்றுலாப் பயணிகள் 5 டொலரினை செலுத்தி எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெறலாம்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி நாட்டிற்கு வருகை தருவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட அனுமதிப்பத்திரம் Tourist Fuel Pass வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள சம்பத் வங்கிக் கிளைகளில் 5 அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் கோட்டா இன்றி தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 50 அமெரிக்க டொலர்கள் மற்றும் அதிகபட்சம் 300 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் எரிபொருளை வழங்க பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.